rtjy 67 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்

Share

பொலிஸ் அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்

பாதாள குழுவினர் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுப்பதையிட்டு ஒட்டுமொத்த பொலிஸ் அதிகாரிகளும் வெட்கப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

தென்மாகாணத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதாள குழுவினருடன் ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் நெருக்கமாக செயற்படுகிறார்கள் எனவும், இதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இனி மன்னிப்பு வழங்கப்படமாட்டாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சிறந்த முறையில் சேவையாற்ற முடியாதவர்கள் தாராளமாக பதவி விலகலாம்.

பொலிஸ் நிலையங்களின் வளங்களை விரிவுப்படுத்துவதற்கு இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். பல சலுகைகளை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

ஆனால் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடையவில்லை. பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பிரதேசத்தில் ஏதேனும் சம்பவம் இடம்பெற்றால் அதற்கு உரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொறுப்புக் கூற வேண்டும்.

பொலிஸாரின் செயற்பாடுகள் இனி புலனாய்வு பிரிவுகள் ஊடாக கண்காணிக்கப்படும். பாதாள குழுவினர் பொலிஸாருக்கு தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.

இந்த நிலைக்கு பொலிஸ் சேவை தள்ளப்பட்டுள்ளதற்கு ஒட்டுமொத்த பொலிஸாரும் வெட்கப்பட வேண்டும்.

பாதாள குழு மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக நான் கடுமையாக செயற்படுவதால் பாதாள குழுவினர் என்னை அமைச்சு பதவியில் இருந்து நீக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

பாதாள குழுவினருடன் ஒருசில பொலிஸ் அதிகாரிகள் நெருங்கிய தொடர்பில் உள்ளார்கள். செய்யும் தொழிலின் கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள அவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் இனி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறந்த முறையில் செயற்பட முடியாத பொலிஸார் தாராளமாக பதவி விலகலாம். நாட்டு மக்கள் பொலிஸ் சேவையை விமர்சிக்காமல் நம்பிக்கை கொள்ளும் நிலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும்.

பொலிஸாரின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைவரும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....