இலங்கையில் ஒரு மணித்தியாலயத்துக்கு 4 புதிய புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
அத்துடன் இரு மார்பக புற்றுநோயாளர்கள் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான பத்திரண தெரிவித்துள்ளார்.
ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் ஒக்ரோபர் 31ஆம் திகதி வரை மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு காலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய ‘நாட்டில் முன்னரே அறிந்து உயிரைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இலங்கையில் மணித்தியாலத்துக்கு 4 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுவதோடு இருவர் உயிரிழக்கின்றனர்.
மார்பகப் புற்றுநோய் ஆண், பெண் என இருவரையும் தாக்கக்கூடியது. ஆனால் இதில் 100 வீத அபாயத்துக்கு உள்ளாகக் கூடியவர்கள் பெண்கள் ஆவார்.
இதனை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை வழங்குவதன் மூலம் குணப்படுத்த முடியும் எனவும் 20 வயதுக்கு மேற்பட்ட சகல பெண்களும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment