அமெரிக்க உயர்மட்ட குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் குறித்த உயர்மட்ட தூதுக்குழுவில் ஆசியாவுக்கான திறைச்சேரியின் துணைச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை இராஜாங்க தூதர் கெல்லி கெய்டர்லிங் ஆகியோரும் அடங்குகின்றனர்.
குறித்த கலந்துரையாடல் தொடர்பில், இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்த சவாலான காலகட்டத்தில், இலங்கைக்கு பாதுகாப்பான மற்றும் ஜனநாயக எதிர்காலத்தை அடைய தொடர்ந்து உதவி மற்றும் நீண்ட கால கூட்டாண்மையை வழங்குகிறோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment