தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

Share

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை (gold price) ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று தளம்பல் நிலை நிலவுகிறது.

இதன்படி, இலங்கையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 603,938 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 170,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 156,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 149,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அதிர்ந்து போயுள்ளது.

ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.

புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...