TNA
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கூட்டமைப்பு மே தினம் கிளிநொச்சி நகரத்தில்!

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணம் தழுவிய, தமிழ்த் தேசியக் கூட்டு மே தினம், கிளிநொச்சி மாவட்டத்தின் 18 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைவில் இன்று (2022.05.01) கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியிலிருந்து மாபெரும் பேரணியாக ஆரம்பித்து, கிளிநொச்சி பசுமைப்பூங்காவை வந்தடைந்ததும், அங்கு மேதின எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இப்பேரணியில் தற்கால வாழ்வியல் நிலையை எடுத்தியம்பும் வகையிலான ஊர்திகளும், நூற்றுக்கணக்கான இளைஞர்களின் ஒன்றிணைவினாலான மோட்டார் சைக்கிள் பவனியும் இடம்பெற்றிருந்த சமநேரத்தில் பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்கள் பலரும் எழுச்சிக் கோசங்களையும், அரசுக்கு எதிரான மற்றும் தமிழினப் படுகொலைக்கும், காணாமலாக்கப்பட்டோருக்கும் நீதி கோரும் வகையிலான உணர்ச்சிக் கோசங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

தன்னெழுச்சியாக ஒன்றிணைந்த மாபெரும் சனத் திரட்சியோடு நடைபெற்ற இத் தமிழ்த் தேசியக் கூட்டு மே நாள் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர்.பத்மநாதன் சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டங்களின் பிரதேச சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபையின் மேனாள் உறுப்பினர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...