gota mahinda
அரசியல்இலங்கைசெய்திகள்

முடிவு ஜனாதிபதியிடம்; எதற்கும் பிரதமர் தயார்! – கோட்டாவுக்கு மஹிந்தர் செய்தி

Share

“பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி என்ற முறையில் உங்களுக்கு உசிதமானது என நீங்கள் கருதும் எந்தத் தீர்மானத்தையும் எடுங்கள். அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார்” என தம்பியார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தமையனார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியிடம் தெரிவித்தார் என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இதன்போதே பிரதமர் மேற்படி விடயத்தை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தினார் எனப் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.

சர்வகட்சி இடைக்கால அரசை நியமிப்பதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இராஜிநாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் யோசனையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பெளத்த பிக்குகளின் சங்க சபா நேற்று கொழும்பில் வைத்து கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

அதையடுத்தே இந்தத் தகவலை ஜனாதிபதிக்குப் பிரதமர் தெரிவித்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

– ‘காலைக்கதிர்’ (01.05.2022 – மாலைப் பதிப்பு)

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...