5559
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வருவோர் இனி நேரடியாக வீடுகளுக்கே!

Share

வெளிநாடுகளில் இருந்து வருவோர் இனி நேரடியாக வீடுகளுக்கே!

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசு தீர்மானித்துள்ளது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோரை பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெறும் வரை ஹோட்டல்களில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு வந்தனர்.

குறித்த தனிமைப்படுத்தல் விடுதிகளில் மோசடி இடம்பெறுவதாகவும் அதிகளவு கட்டணங்களை வசூலிக்கும் செயற்பாடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவதானம் செலுத்தியதுடன், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தலும் வழங்கியுள்ளார்.

அதன்படி வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டு சில மணிநேரத்துக்குள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...