5 48
இலங்கைசெய்திகள்

மகிந்த ஒருபோதும் அழமாட்டார் :ஆதரவாக களமிறங்கிய தேரர்

Share

மகிந்த ஒருபோதும் அழமாட்டார் :ஆதரவாக களமிறங்கிய தேரர்

மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) தனது வசிப்பிடத்தை இழப்பதற்காகவோ அல்லது தனது பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டதற்காகவோ அழுபவர் அல்ல. அவர் ஒரு சிறந்த தலைவர் என இத்தகண்டே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் இல்லத்திற்கு வாடகை செலுத்த வேண்டும் இல்லையெனில் அவர் அந்த இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார (anura kumara)தெரிவித்த நிலையிலேயே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சேறு பூசும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் புலம்புவதாகவும் அனைவரும் கூறுகின்றனர்.

ஆனால் நாய்க்குட்டிகளைப் போல சிங்கங்கள் சிணுங்குவதில்லை.”மகிந்த ராஜபக்ச தனது வசிப்பிடத்தை இழப்பதற்காகவோ அல்லது தனது பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டதற்காகவோ அழுபவர் அல்ல. அவர் ஒரு சிறந்த தலைவர். அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை மதிப்பீடு செய்ய அனுப்பப்பட்ட நபர் சொத்துகள் முகாமைத்துவக் கிளையின் வெறும் எழுத்தராக மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

மகிந்த, கொழும்பில்(colombo) உள்ள விஜேராமவில் 4.6 மில்லியன் செலவழித்து வாழ வேண்டிய ஒருவர் அல்ல. தேவை ஏற்படின் அவர் கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருக்க முடியும்,”.

“எனவே, தற்போதைய தலைவரின் படுக்கைக்கு அருகில் ஈரமான சாக்கு மூட்டையை வைத்து அவரை எழுப்பவும், அவர் இப்போது நாட்டின் ஜனாதிபதி என்பதை நினைவுபடுத்தவும் யாராவது அவருடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று தேரர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...