அடுத்துவரும் நாட்களில் நாட்டில் பாணுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அதனை பெறவும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.” – என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
” நாட்டில் தற்போது பேக்கரிகளுக்கு 50 வீதமான கோதுமை மாவே வழங்கப்படுகின்றது. இதனால் மூன்று அல்லது நான்கு நாட்கள் தான் பேக்கரிகளில் வேலை நடக்கின்றது.
அடுத்துவரும் நாட்களில் பாணுக்கு தட்டுப்பாடு ஏற்படும். வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படும்.
டொலர் இருந்தால் போதுமாளனவு மாவை வழங்கமுடியும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த பிரச்சினையை அரசு தீர்க்க வேண்டும்.” – என்றும் மேற்படி சங்கம் குறிப்பிட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment