நாட்டில் அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 21ஆவது சரத்தும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமைகளை பேணும் அரசியலமைப்பின் 14 (1) (ஆ) உறுப்புரையும் தற்போதைய அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்படுகிறது..
அரசாங்க கட்டடங்களை கைப்பற்றுவதற்கும் சொத்துக்களை பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அனுமதிக்கக் கூடாதென அமெரிக்க சிவில் சுதந்திர சங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களில் குறிப்பிட்டுள்ளது.
சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படாமல் நகரில் அகிம்சை வழியில் போராட்டங்களை தொடர அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
விஹாரமஹாதேவி பூங்காவில் திறந்தவெளி அரங்கு, புதிய நகர மண்டபம், ஹைட் பார்க் மற்றும் கெம்பல் பார்க் போன்ற கொழும்பிலுள்ள வசதிகள் அனைத்தும் வன்முறையற்ற போராட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோட்டா கோ கம போராட்டத் தளம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என்றும், பாதுகாப்பு தரப்பினரால் அகற்றப்படவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment