26 698472524cf78
செய்திகள்உலகம்

பிரான்ஸில் சீன உளவாளிகள் கைது: Airbnb வீட்டின் தோட்டத்தில் செயற்கைக்கோள் கருவி மூலம் ரகசியத் தகவல் சேகரிப்பு!

Share

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கிராமப்புற வீடு ஒன்றிலிருந்து தகவல்களைத் திரட்டியதாகக் சந்தேகிக்கப்படும் சீன உளவாளிகள் இருவர் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போர்டாக்ஸ் (Bordeaux) நகருக்கு அருகில் உள்ள காம்ப்ளேன்ஸ்-எட்-மேனாக் (Camblanes-et-Meynac) என்ற அமைதியான கிராமத்தில், ‘Airbnb’ மூலம் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டின் தோட்டத்தில் சீனர்கள் இருவர் பாரிய செயற்கைக்கோள் அண்டெனாவைப் (Parabolic Antenna) பொருத்தியுள்ளனர்.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், அதேநேரம் தங்களது இணையச் சேவைகளிலும் இடையூறுகள் ஏற்பட்டதைக் கண்டு காவல்துறைக்குத் தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை பிரான்ஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பொது இயக்குநரகத்தின் (DGSI) அதிகாரிகள் குறித்த வீட்டை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.

இதன்போது அங்கிருந்த பெருமளவிலான கணினி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், 27 மற்றும் 29 வயதுடைய இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பரிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, “பிரான்ஸின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டு சக்தியொன்றுக்குத் தகவல்களை வழங்கியமை” ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இவர்கள் கடந்த மாதம் ‘பொறியியலாளர்கள்’ என்ற போர்வையில் தொழில் வீசாவைப் பெற்று பிரான்சுக்குள் நுழைந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஈலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) செயற்கைக்கோள் வலையமைப்பின் தரவுகள் மற்றும் பிரான்ஸின் முக்கிய இராணுவத் தளங்களின் தகவல்களைத் திரட்டி, அவற்றைச் சீனாவுக்கு அனுப்ப இவர்கள் முயற்சித்துள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் ஏர்பஸ் (Airbus), தேல்ஸ் (Thales) போன்ற முன்னணி விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், இந்தப் பகுதி நீண்டகாலமாகவே வெளிநாட்டு உளவாளிகளின் இலக்காக இருந்து வருவதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...