bN22zcc859apYVXd7ubU 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தாயகம் திரும்பிய இளம் குடும்ப பெண் உயிரிழப்பு!

Share

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மனியில் இருந்து தாயகம் திரும்பிய இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம்  நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணும் வயோதிப தயார் ஒருவரும் உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வெளிநாட்டு பெண் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பயணித்த மற்றையவர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் சிலாவத்தை பகுதியினை சேர்ந்த ஜேர்மனியில் வசித்துவரும் 42 வயது சறீதர் ஜெனிற்றா என்ற குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் வெளிநாட்டில் இருந்து தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டுவிழா செய்வதற்காக சொந்த இடமான முல்லைத்தீவு – சிலாவத்தைக்கு வந்துள்ள நிலையில் இந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது.

மேலும் விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...