டெல்டா தொற்று ப
இலங்கைசெய்திகள்

2ஆவது டோஸின் பாதுகாப்பு 3 மாதங்களில் குறைவடையலாம்!

Share

இரண்டாவது தடுப்பூசியின் பாதுகாப்பு மூன்று மாதங்களின் பின்னர் குறைவடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 3 மாதங்களின் பின்னர் பாதுகாப்பு தன்மை குறைவடைந்து நோய் பரவலடையும் தன்மை அதிகரிக்கலாம்

என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு ஒவ்வாமை மற்றும் உயிரியல் மூலக்கூறு பிரிவின் பணிப்பாளர் வைத்தியா் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் டெல்டா தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில், அல்பா தொற்றினால் ஏற்படும் பாதிப்பை விட இரண்டு மடங்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் விளக்கமளித்துள்ளதாவது,

இரண்டு முறை தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஒருவருக்கு டெல்டா தொற்று ஏற்படுமாயின் அவரிடமிருந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பரவலடையும் தன்மை குறைவடையும்.

ஆனால் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 3 மாதங்களின் பின்னர் பாதுகாப்பு தன்மையானது குறைவடைதாகவும், டெல்ட்டா தொற்று பரவலடையும் தன்மை அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mahavali
இலங்கை

மகாவலியில் மாயமான 15 வயதுச் சிறுவன் – தேடுதல் பணிகள் தீவிரம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் மூன்று சிறுவர்கள் இணைந்து...

gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...

harsa
இலங்கை

நூலிழையில் உயிர் பிழைத்தார் ஹர்ஷ டி சில்வா!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 20ஆம் திகதி மாலை...

car bike
இலங்கை

நுவரெலியாவில் கோர விபத்து.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் நேற்று மாலை நுவரெலியா நோக்கி...