sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்கள் நிகழ்ச்சி நிரலிலேயே இப்போதும் ஆட்சி!!

Share

போராட்டத்தின் மூலம் ராஜபக்சர்கள் விரட்டியடிக்கப் பட்டாலும், தற்போதைய ராஜபக்ச நிழல் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை கூட பல்வேறு சதிகளால் தடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெஹியோவிட்ட பிரதேசத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

பல நூற்றாண்டுகளாக பெருமையுடன் அபிமானத்துடனும் வாழ்ந்து வந்த குடிமக்கள் இருந்த நம் நாட்டில் ராஜபக்சர்களின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியினால் இந்த அபிமான தேசம் அழிந்ததாக சுட்டிக்காட்டினார்.

நண்பர் கூட்டம், முதலாளித்துவ ராஜபக்ச குடும்ப வாதம், ஊழல், இலஞ்சம் போன்றவற்றால் இந்நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

நாட்டை இவ்வளவு பாதாளத்திற்கு கொண்டு சென்றது ராஜபக்ச குடும்பவாதமே எனவும், இதற்காக, 2005 இல் ராஜபக்சர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது, நாட்டுக்கு தீர்வு என கூறிக்கொண்டிருக்கும் சிவப்பு தம்பிமார்கள் தான் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கு அவர்கள் மகுடம் சூட்டினாலும் சஜித் பிரேமதாஸ ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபடவில்லை எனவும், தாம் எப்போதும் பொதுமக்களுடனே இருப்பதாகவும்  சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் தேர்தல் வெற்றியின் மூலம் எமது நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள், செல்வங்கள் பணம் அனைத்தும் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு திருடர்களைப் பிடித்து வெளிப்படத்தன்மை வாய்ந்த அரச ஆட்சி  நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

போராட்டத்தின் மூலம் ராஜபக்சர்கள் விரட்டியடிக்கப் பட்டாலும், தற்போதைய ராஜபக்ச நிழல் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை கூட பல்வேறு சதிகளால் தடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க போதுமான பணம் உள்ளபோதிலும், தேர்தல் செலவுக்கு மட்டும் பணம் இல்லை எனக் கூறுவது நகைப்புக்குரியது என்று தெரிவித்த அவர், தேர்தலை நடத்தாவிட்டால் ஜனநாயக ரீதியிலும் அமைதியான போராட்டத்தின் மூலமும் தேர்தலை எவ்வாறேனும் பெறுவோம் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...