புதிய நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கரு ஜயசூரியவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது 21 ஆவது திருத்தச்சட்டமூலம் உட்பட சமகால அரசியல் நிலைவரம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அவ்வேளையிலேயே புதிய நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு, பிரதமர் விடுத்த அழைப்பை, கருயசூரிய ஏற்றுள்ளார்.
நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுக்களை வலுப்படுத்துவதுடன், இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக, குறித்த குழுவை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment