breadeee
இலங்கைசெய்திகள்

பாணின் விலையும் 5 ரூபாவால் அதிகரிப்பு

Share

ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோதுமை மா மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

கட்டுப்பாட்டு விலை நீக்கத்தை அடுத்து இன்று முதல் 10 ரூபாவால் கோதுமை மா விலை அதிகரிப்பதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களின் ஒன்றான செரண்டிப் அறிவித்திருந்தது.

சமையல் எரிவாயுவின் விலைகளும் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் ஒரு இறாத்தல் பாணியின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்பு வெளியாகிவில்லை.

இதேவேளை நாளை முதல் சோறு பார்சன், கொத்து பார்சல் , பால் தேநீர், பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் ர10 ரூபாவால் அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
landslide samui2 696x522 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மண்சரிவு அகற்றும் ஊழியர் மீது தாக்குதல்: கட்டுகஸ்தோட்டையில் நபர் கைது – வீடியோ வைரல்!

கண்டி – குகாகொட வீதியில் மண்சரிவு காரணமாக குவிந்திருந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில்...

1763436612 MediaFile 1
இந்தியாசெய்திகள்

அரியானாவில் கடுமையான மூடுபனி: 35+ வாகனங்கள் மோதல் – பலர் படுகாயம்!

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் இன்று காலை வீதிகள் தெரியாத அளவுக்கு அடர்ந்த மூடுபனி சூழ்ந்த காரணத்தினால்,...

1696297899 1696296365 Muder L
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பமுணுகம கொலை: நிலத்தகராறில் மூத்த சகோதரரால் தம்பியைத் தாக்கிக் கொலை!

பமுணுகம, சேதவத்த பகுதியில் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நீண்டகாலமாக நிலவி வந்த...

1765346597 Rebuilding Sri Lanka 6
அரசியல்இலங்கைசெய்திகள்

அனர்த்த முகாமைத்துவக் கொள்கையை புதுப்பிக்க வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!

நாட்டின் அனர்த்த முகாமைத்துவக் கொள்கையை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...