douglas devananda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் தீர்மானம் நல்லெண்ண சமிக்கையாக பயன்படுத்தப்பட வேண்டும் – புலம்பெயர் உறவுகளிடம் டக்ளஸ் வேண்டுகோள்

Share

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தினை நல்லெண்ண சமிக்கையாக புலம்பெயர் உறவுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவினை எந்தவிதமான சஞ்சலமும் இன்றி துணிச்சலாக வெளிப்படுத்திய ஈ.பி.டி.பி. கட்சி, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைுவேற்றும் வகையில் சுமார் 10 அம்சக் கோரிக்கை முன்வைத்திருந்தது.

அதில் ஒன்றாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடை நீக்கப்பட வேண்டும் என்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடை நீக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தினை புலம்பெயர் உறவுகள் சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்தி, நாட்டில் வாழ்ந்து வருகின்ற தங்களுடைய உறவுகளின் பொருளாதார பலத்தை கட்டியெழுப்புவதற்கு முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் ஏனைய கோரிக்கைகளும் முன்னுரிமை அடிப்படையிலாயினும் நிறைவேற்றப்படுவதுடன், தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லீம் அமைப்புக்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1769831545 dead 6
செய்திகள்அரசியல்இலங்கை

கையடக்கத் தொலைபேசி தகராறு: 14 வயது மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை!

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தில்...

4680497 2145223106
செய்திகள்உலகம்

கொங்கோவில் பயங்கரம்: சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – உலகளாவிய கோல்டன் உற்பத்தியில் பாதிப்பு!

கிழக்கு கொங்கோவில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற ருபாயா (Rubaya) சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200-க்கும் மேற்பட்ட...

230413 Sri Lanka PTA 32JX8B7 highres
செய்திகள்அரசியல்இலங்கை

PTA மற்றும் PSTA சட்டங்களை உடனடியாக மீளப் பெறு! – நீதி அமைச்சிற்கு முன்பாக சிவில் அமைப்புகள் பாரிய போராட்டம்.

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA)...

President Anura Kumara Dissanayake Central Bank Meeting 1024x786 1 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் ஜனாதிபதி எதிர்வரும் 3ஆம் திகதி பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி...