அரசியல்இலங்கைசெய்திகள்

சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

8807a297 066f 4bb6 88bb 5482b86ac5ed
Share

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று டோக்கியோவில் சந்தித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமரிடம் விளக்கமளித்தார்.

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இதனை வரவேற்ற பிரதமர் லீ சியென் லூங் , இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் மீண்டும் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

அடுத்த வருடம் இலங்கை 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சிங்கப்பூர் பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...