ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விரைவில் சீனா செல்லவுள்ளார் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.
மேலும், வர்த்தகம் முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு வழங்குமாறு சீனாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி சீனா செல்லவுள்ளார்என சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீனா தொடர்பில், புதிய அரசாங்கத்தின் கொள்கையில் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படாது என தெரிவித்துள்ள சீனத் தூதர் கொழும்பிலும். அம்பாந்தோட்டையிலும் சீனாவின் ஆதரவுடன் கூடிய பரந்த துறைமுகத் திட்டங்களுக்கு மேலதிக முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் சீனா, இலங்கைக்கு உதவ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment