18 9
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: மார்ச் 15-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் விஜய்!

Share

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் ஏற்கனவே இரண்டு முறை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அந்த விசாரணையின் தொடர்ச்சியாக, அவரிடம் மேலும் சில கூடுதல் விவரங்களைப் பெற வேண்டியுள்ளதால் மீண்டும் ஆஜராகுமாறு சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

மார்ச் 10-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிஐ அழைப்பு விடுத்திருந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகள் காரணமாகத் தனக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், விசாரணையைச் சென்னையிலேயே நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை பரிசீலித்த சிபிஐ, தவெக தலைவர் விஜய் எதிர்வரும் மார்ச் 15-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு புதிய சம்மனை அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 15-ம் தேதி சிபிஐ முன்னிலையில் விஜய் ஆஜராவார் என தவெகவின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்பொழுது இந்த வழக்கு விசாரணையில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் மார்ச் 17-ம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்மனைப் பெற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி, சிபிஐ விசாரணைக்கு நேரில் சென்று உரிய விளக்கம் அளிக்க உள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையைச் சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. இரு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் கால அரசியல் செயல்பாடுகளுக்கு மத்தியில், இந்த விசாரணை நடவடிக்கைகள் சட்ட ரீதியாக எவ்வாறு நகரப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...