Death body 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ​சடலமாக மீட்பு!

Share

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ​நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியை சேர்ந்த தெய்வேந்திரம் வசந்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவரது இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருவதுடன், ஒரு பிள்ளை வெளியூரில் வசித்து வருகின்றார்.

அந்நிலையில் வயோதிப பெண் தனது வீட்டில் தனியே வாழ்ந்து வந்துள்ளார்.

இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இவரது சகோதரன் வழமை போன்று இன்றைய தினம் உணவு கொடுக்க சென்ற நிலையில் சகோதரி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

அதனை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6981e649399d3
செய்திகள்இலங்கை

பெண் காவலரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு கோட்டை பகுதியில் பெண் காவலர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை...

20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம்...

1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில்...

Namal CID
செய்திகள்அரசியல்இலங்கை

செல்லப்பிராணியையும் விசாரணைக்கு அழைத்து வரத் தயார்! – சிஐடி விசாரணையின் பின் நாமல் ராஜபக்ச காட்டம்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்...