கடவத்தையிலுள்ள ஆடையகம் ஒன்றில் பணப் பெட்டகத்தை உடைத்து 2 கோடி 70 இலட்சம் ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள 32 வயதான குறித்த சந்தேகநபர், குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இவர் வங்கிக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
#SriLankaNews
Leave a comment