போரியலின் பக்கம் கவனம் செலுத்திய ஊடகங்கள் போரினால் வதைபட்ட மக்களின் வாழ்வியலை பற்றியும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தன்னால் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தப்பட்டு வந்த13 ஆம் திருத்தச் சட்டத்தினை வலுப்படுத்தி வந்தால் பாரிய அழிவுகளை தடுத்திருக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் வெளியீட்டுப் பணியகத்தின் கிளை காரியாலயத்தினை யாழ் மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வினை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெகுஜன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்ட குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், யாழ் மாவட்ட மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும்ப பயனளிக்கும் வகையில் தகவல் வெளியீட்டு பணியகத்தினை ஆரம்பித்து வைத்தமைக்காக வெகுஜன ஊடகத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
அத்துடன், இனங்களுக்கிடையிலான நல்லுறவு வளர்க்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதிலும் அர்த்தபூர்வமான செயற்பாடுகளை வெளிப்படுத்துகின்ற அமைச்சர் டளஸ் அழகப்பெரும.
2013 ஆம் ஆண்டு மாத்தறை மாவட்டத்தில் சேர் பொன்னம்பலம் மாவத்தை என்று வீதிக்கு பெயர் சூட்டியதையும் நினைவுபடுத்தினார்.
#SrilankaNews
1 Comment