இலங்கை- இந்திய ஒப்பந்தம் என்பது 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டது எங்களுக்குத் தெரியாது என்று தமிழீழ விடுதலைப்புலிகள் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.
இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (02) யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக நன்மைதரக்கூடிய வகையில் இருந்தால் ஒத்துழைப்பு வழக்கத்தயார் என்ற அடிப்படையில், இடைக்கால அதிகாரசபை ஒன்று உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனுடைய தலைவராக வருவதற்கு மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அதில் பத்மநாதனைத் தலைவராக விடுதலைப்புலிகள் தெரிவு செய்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment