images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

Share

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர் தினத்தை முன்னிட்டு வீரர்களை நினைவுகூர்ந்துள்ளார். இந்தியாவின் காரைக்குடியில் நேற்று (நவம்பர் 27) நாம் தமிழர் கட்சியால் அனுசரிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இலங்கையின் இறுதிப் போர் குறித்துப் பல கேள்விகளை எழுப்பினார்.

சீமான் தனது உரையில், “வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தோர்: “போர்க்காலத்தில் வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடையுங்கள் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதிகள் கூறினர். அதன்படி, வெள்ளைக்கொடியுடன் சென்று 300 பேர் சரணடைந்தனர்.”

“வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்களைக் கொலை செய்யக் கூடாது என்பது சர்வதேசப் போர் மரபு. இருப்பினும், அவர்களை எப்படி கொலை செய்தீர்கள்? ஏன் அவர்களை கொலை செய்தீர்கள் என்று யாரும் கேட்கவில்லை.”

“முள்ளிவாய்க்காலில் இருந்து எல்லோரும் வாருங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகின்றோம் என அழைத்தவர்கள் சிங்கள இராணுவத்தினர். சரணடைந்த 10,000க்கும் மேற்பட்டோர் இப்போது எங்கே போனார்கள்? அவர்கள் கொல்லப்பட்டபோது சர்வதேசத்திலிருந்தும் எவரும் ஏன் கேள்வி எழுப்பவில்லை?”

மேலும், அவர் தனது உரையை முன்னெடுத்தபோது, தேசிய தலைவரையும் நினைவு கூர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 18
விளையாட்டுசெய்திகள்

சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து வெளியேறிய அத்லெடிகோ மாட்ரிட்: பயிற்சியாளர் பதவியிலிருந்து சிமியோனி விலகுகிறாரா?

ஐரோப்பிய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சாம்பியன்ஸ் லீக் அரை இறுதிப் போட்டியில், இங்கிலாந்தின்...

Untitled 16
செய்திகள்உலகம்

பாகிஸ்தான் ராணுவ மரியாதையுடன் பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கு: நாட்டு அரசியல்வாதியின் கருத்தால் சர்ச்சை

பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவர் அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், சர்வதேச அளவில் தேடப்படும்...

Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...