பொரள்ளை மயானத்தில் காரில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார்.
அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடத்தப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்த நிலையில் இன்று மாலை பொரள்ளை மயானத்தில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
#SriLankaNews
Leave a comment