sajith 7567
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கியையும் அரசியலாக்கிறது அரசு! – சஜித் சுட்டிக்காட்டு

Share

மத்திய வங்கியையும் அரசியலாக்கிறது அரசு! – சஜித் சுட்டிக்காட்டு

நிதிக்கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதே மத்திய வங்கியின் பிரதான செயற்பாடாகும். வங்கிக் கட்டமைப்பை ஒழுங்கு முறைப்படுத்துகின்ற மற்றும் மொத்த நிதிச் செயற்பாட்டின் கட்டமைப்பை ஒழுங்கமைக்கின்ற பொறுப்பு மத்திய வங்கிக்கே காணப்படுகின்றது. அரச நிதி தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வேண்டியது மத்திய வங்கியேயாகும். இவற்றை அரசியல் தலையீடுகள் இன்றியே மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

சுயாதீனமாக செயற்படுகின்ற மத்திய வங்கிகள் நாட்டு மக்களுக்கு சிறந்த பொருளாதார கட்டமைப்பை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதை உலக நாடுகளின் செயற்பாடுகளில் இருந்து உதாரணமாக பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கை மத்திய வங்கியின் நம்பகத்தன்மைக்கு பங்கம் ஏற்படும் வகையில் இருண்ட வரலாற்றுப் பதிவுகளை கொண்ட ஒருவரை ஆளுநராக நியமிக்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் செயற்பாடானது,  சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வீழ்ச்சியடைய வைக்கும் என்பதை தடுக்க முடியாது என்பது உண்மையே.

உலக நாடுகளில் சில மத்திய வங்கிகள்,  தமது பொறுப்பற்ற நிதிக்கொள்கை செயற்றிட்டம், நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக தமது நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும்  நெருங்கியவர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியதன் ஊடாக செயற்பட்டு இருக்கின்றமை தெரிந்த விடயமாகும்.

ஆஜர்ன்டீனா, ஹங்கேரியா, சிம்பாப்வே, போன்ற நாடுகள் இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இந்த நாடுகளில் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதோடு அதிக பணவீக்கத்தையும் சந்தித்து மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றது.

இந்த நாட்டின் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படப் போகின்ற அஜிட் நிவாட் கப்ரால்  பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதோடு அதே அரசின் நிதி இராஜாங்க அமைச்சராக இருந்தவர்.

எமது நாட்டின் கடனை திருப்பிச் செலுத்துகின்ற போராட்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கின்ற நிலையில், இந்த பொருளாதார நெருக்கடி காணப்படுவதோடு அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காணப்படுகின்ற இந்த நிலையில் அஜிட் நிவாட் கப்ராலை மத்திய வங்கி ஆளுநராக பிரேரித்து அவரை நியமிக்கின்ற போது சர்வதேச நிதிச் சமூகத்துக்கு எமது நாடு குறித்தும் எமது நாட்டின் பொருளாதாரம் குறித்தும் குழப்பம் ஏற்படுவதோடு நம்பிக்கையீனத்தையும் வழுவாக உருவாக்குவதாகவும் அமையும்.

நம்பிக்கைக்கு மிகப்பெரும் மோசடி செய்து இருண்ட யுக வரலாற்றைக் கொண்டுள்ள ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை மொத்த நாட்டு மக்களுக்கும் இழைக்கின்ற துரோகமாகும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்யுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...

images 7 4
செய்திகள்உலகம்

கனடாவை நோக்கிப் படையெடுக்கும் அமெரிக்கர்கள்: இடப்பெயர்வு செய்ய விரும்பும் நாடுகளில் கனடா முதலிடம்.

அமெரிக்கக் குடிமக்கள் 2026ஆம் ஆண்டில் இடப்பெயர்வு செய்ய விரும்பும் மிகவும் பிரபலமான நாடுகளில் கனடா முதலிடத்தில்...

Image 2025 08 41e4a2510e8ad510f382097329a712cd 16x9 1
செய்திகள்இலங்கை

இலங்கை கண் தானம் உலக சாதனை: 2.28 மில்லியனுக்கும் அதிகமானோர் உறுதியளிப்பு!

இலங்கையின் நீண்டகால மனிதாபிமான முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2.28 மில்லியனுக்கும் அதிகமான...