kar
அரசியல்இலங்கைசெய்திகள்

ஒட்டுமொத்த அரசும் பதவி விலக வேண்டும்! – பேராயர் கொந்தளிப்பு

Share

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும்.” – என்று கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் மதத் தலைவர் என்ற ரீதியிலும் நாட்டின் பிரஜை என்ற அடிப்படையிலும் தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது என்பதால், நாட்டு மக்களுக்காக இந்த கோரிக்கையை விடுக்கின்றேன்.

இன்று எமது நாடு எதிர்நோக்கியுள்ள உக்கிரமான நெருக்கடி மற்றும் அசௌகரியமான சூழ்நிலைக்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டியது ஜனாதிபதியும், கடந்த இரண்டரை வருடங்களாக அரசால முன்னெடுக்கப்பட்ட குறுகிய மனபாங்குடனான சர்ச்சைக்குரிய தீர்மானங்களுமே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முழு நாட்டு மக்களினதும் நம்பிக்கையை இழந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் தொடர்ந்தும் பதவியில் இருப்பது, கடினமான சூழ்நிலையில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்ப பாரிய தடையாக காணப்படுகின்றது.

மக்கள் எதிர்பார்க்கும் முறையான மாற்றத்தை, நம்பிக்கை மற்றும் வௌிப்படைத்தன்மையுடன் முன்னெடுப்பதற்கு சர்வ கட்சியுடனான இடைக்கால அரசை ஸ்தாபிக்க முடியும். கருத்துக்கணிப்பினூடாக பொதுத்தேர்தலுக்கு செல்ல முடியும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...