tamilnib 6 scaled
இலங்கைசெய்திகள்

நடிகர் விஜய் ஜனவரியில் இலங்கை விஜயம்

Share

தென்னிந்திய பிரபல நடிகரான தளபதி விஜய், தனது 68 ஆவது படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு வரவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘லியோ’ படத்தின் வெற்றிக்குப் பின்னர், விஜய் தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார். படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இந்தப் படத்தின் ஹைதராபாத் படப்பிடிப்பின் அட்டவளை முடிவடைந்துள்ளது. படத்தின் இந்த படப்பிடிப்பு அட்டவணைக்காக இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய நடிகர்களை ஒருங்கிணைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் படக் குழு தங்கள் குடும்பங்களுடன் புத்தாண்டுக்காக ஓய்வு எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘தளபதி 68’ படத்தின் அடுத்த படப்பிடிப்பு அட்டவணை இலங்கையில் இடம்பெறும் எனவும், ஜனவரி இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ‘தளபதி 68’ படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகின்றது.

இப்படத்திற்கு ‘G.O.A.T.’ (Greatest One Across Times) என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

‘தளபதி 68’ ஒரு கால பயணம் தொடர்பான படம் என்று கூறப்படுகின்றது. இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கின்றார் எனவும் கூறப்படுகின்றது. மேலும், பல நட்சத்திரங்கள் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார் என்பதுடன் கல்பாத்தி எஸ்.அகோரம் படத்தைத் தயாரிக்கின்றார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...