VideoCapture 20220619 135006
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழகம் – வடக்கு பகுதிகளிடையே கப்பல் சேவையை விரைந்து செயற்படுத்துங்கள்! 

Share

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகுப் போக்குவரத்து சேவையையும் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையே வர்த்தக சரக்கு கப்பல் சேவையையும் மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் யாழ்ப்பாணத்துக்கான சர்வதேச விமான நிலையம் புனரமைக்கப்பட்டு – திறக்கப்பட்டு விமான போக்குவரத்து சேவைகள் சுமுகமாக நடைபெற்று வந்த சூழ்நிலையில் கொரோனாவை காரணம் காட்டியும் அரசியல் காரணங்களாலும் அது இடைநிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் இதனூடாக போக்குவரத்தை தொடங்குவது என்பது வரவேற்க்ககூடிய விடயம். அத்துடன்

1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் ராமேஸ்வரம் – தலைமன்னாரிடையே படகுப் போக்குவரத்து சேவை இடம்பெற்றதுடன் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையும் இடம்பெற்றது.

ஆகவே இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகுப் போக்குவரத்து சேவையையும், தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையே வர்த்தக சரக்கு கப்பல் சேவையையும் மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை ஆரம்பித்தால் தான் தற்போது நாட்டின் பொருளாதாரம்

உயர்வடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. வெறுமனே வந்த விமான போக்குவரத்து அமைச்சர் புதிதாக தானே இந்த விமான சேவையை ஆரம்பிப்பது போல சித்தரிக்ககூடாது – என்றார்.

இதேவேளை, வடக்கு – கிழக்கு மக்கள் 2019ஆம் ஆண்டு தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தை நிராகரித்து விட்டார்கள். ஆனால் தற்போது தென்னிலங்கை மக்கள் ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தை நிராகரித்த போதும், கரத்த களரி நிலை ஏற்பட்டபோதும் அரசாங்கம் தனது பதவியை விட்டு விலகாமல் உள்ளது.

ஆகவே அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...