1 5
அரசியல்இலங்கைசெய்திகள்

பல்கலை விரிவுரையாளர்களும் ஆதரவு! – செவ்வாயன்று காலிமுகத்திடல் நோக்கிப் பேரணி

Share

கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக நடத்தப்படும் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அடையாளப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது.

பொதுமக்களின் வாழ்வுரிமைக்காகக் காலிமுகத்திடலில் நடத்தப்படும் போராட்டத்துக்கான தமது தார்மீக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கொழும்புப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து காலிமுகத்திடல் நோக்கி இந்த அடையாளப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் அறிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் நேரடியாக இந்த அடையாளப் பேரணியில் கலந்துகொள்வார்கள் எனவும், நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் அதேகாலப் பகுதியில் அந்தந்தப் பல்கலைக்கழகங்களில் அடையாளப் போராட்டத்தை நடத்துவார்கள் என எதிர்பார்கப்படுகின்றது எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...