24 6663b26474c92
இலங்கைசெய்திகள்

பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்

Share

பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்

பாடசாலையில் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் மயங்கி விழுந்து பதியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை, பதியத்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு மாணவர்களுக்கும் பாடசாலைக்கு வரும் போது போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் இருபத்தொரு வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் ஆறு வயது மாணவனும், ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு வயது மாணவனுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதியத்தலாவ, கெஹெல் உல்ல பிரதேசத்தில் வசிக்கும் இளைஞராவார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் பாடசாலைக்கு இந்த இரு மாணவர்கள் வரும்போது இவற்றைக் கொடுத்த பின்னர், அவர்கள் பாடசாலைக்கு வந்து அவற்றை சாப்பிட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

இது குறித்து பாடசாலை அதிபருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...