24 6663bd5122154
இலங்கைசெய்திகள்

4 வயது குழந்தையை தாக்கியவரை தாக்கிய சிறைக்கைதிகள்

Share

4 வயது குழந்தையை தாக்கியவரை தாக்கிய சிறைக்கைதிகள்

காணொளி சாட்சியம் ஒன்றின் அடிப்படையில், வெலிஓயா ஹன்சவில என்ற கிராமத்தில் 4 வயது குழந்தையை தாக்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர் மீது அனுராதபுரம் சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

முன்னதாக அவர் குழந்தையை தாக்கிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், நீதிமன்றால் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், விளக்கமறியலில் வைத்து அவரை ஏனைய கைதிகள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்ணாடி கொள்கலனில் வைத்திருந்த சர்க்கரையை சாப்பிட்டதற்காக குறித்த குழந்தை தாக்கப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
policeee
இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்து வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள் – வெலிக்கடையில் இறுதி அஞ்சலி.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் 7 அதிகாரிகள் சிறைக்கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு...

dengue original
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் – உயர்வடையும் உயிரிழப்புகள்.

இலங்கையில் இந்த வருடம் இது வரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக...

Boossa Prison 1
இலங்கை

பாரிய கற்களை கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் – பூஸா சிறையில் கைதி மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

001111
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் அலட்சியப்படுத்தப்பட்டதா புலனாய்வுத் துறையின் தகவல்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம்...