Death body 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மாணவன் பலி!

Share

வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இன்று காலை 10:00 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் மரணமடைந்துள்ளான்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் வடமராட்சி கரவெட்டி குஞ்சர் கடை கண்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் செலுத்திக் கொண்டிருந்த மாணவனிற்க்கு முன்னால் மாடு ஒன்று குறுக்காக சென்றதாகவும் ,இதனால் பதட்டமைந்த மாணவன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாகவே காயமடைந்த மாணவனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது மருத்துவ மனையில் மரணமடைந்துள்ளதாகவும். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகலை நெல்லியடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் தற்போது உரிய விசாரணைகளுக்காகவும், உடற்கூற்று பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து சம்பவத்தில் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே மரணமடைந்துள்ளான்.

குறித்த நபர் தற்போது நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...