25 68443941d7aeb
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகள் அமைப்பை வைத்து அரசியல் செய்யும் இனவாதிகள்! சமூக ஆர்வலர் ஆதங்கம்

Share

இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், மற்றும் மதவாதிகள் தங்கள் அதிகாரத்தை இழக்கும் ஒவ்வொரு முறையும், விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழுச்சி பெறுவதாக பொய்களைப் பரப்பி வருகின்றனர் என சமூக ஆர்வலர் சிரிந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமையை அழிக்க பொய்யான அறிக்கைகளை வெளியிடுபவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி இன்று பொலிஸ் முறையாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

ஊடகங்களுக்கு இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், மற்றும் மத வெறியர்கள் வெள்ளவத்தை கடற்கரையில் உறவினர்களுக்காக நடத்திய நினைவு நிகழ்வை சீர்குலைக்க முயன்றனர்.

அங்கு சென்றவர்களின் குடும்பத்தின் ஒரு உறவினர் போரின் போது இறந்திருக்கலாம். அவர்களை நினைவு கூறுவது தவறல்ல, ஒரு உறவினரை இழந்ததன் வலி குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்.

எனவே, சமீபத்தில் வெள்ளவத்தை கடற்கரையில் தமது உறவுகளை போரில் இழந்தவர்களால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இது விடுதலைப் புலிகளை வளப்படுத்தவோ அல்லது மீண்டும் எழுச்சி பெறவோ அனுமதிக்காது.

இவ்வாறான செயற்பாடுகளினால் பாதிப்புறும் இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...