download 14 1 4
அரசியல்இலங்கைசெய்திகள்

சமூக அமைப்புகளிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

Share

சமூக அமைப்புகளிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

தேசிய எல்லை நிருணய ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எல்லை மீள் நிருணய வரைவு அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதையும், அதுதொடர்பில் மக்களிடத்தே அதிருப்தி நிலவுவதையும் அவதானிக்க முடிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இதுவிடயமாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ;குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுடைய ஆலோசனைகள் எவையும் பெறப்படாமலேயே இவ் எல்லை மீள் நிருணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, மக்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான நிலத்தொடர்பு, நிருவாகத் தொடர்பு, சமூக ஊடாட்டங்கள், போக்குவரத்து உள்ளிட்ட காரணிகள் கருத்திற்கொள்ளப்படாமை மாவட்டத்தின் சமூக, அரசியல் மற்றும் நிருவாக ஸ்திரத்தன்மையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய பாதிப்புக்கள் தொடர்பில், அந்தந்த வட்டாரங்களைச் சேர்ந்த சமூகமட்ட அமைப்புக்கள் தங்களின் எழுத்துமூல பரிந்துரைகளை, எல்லை மீள் நிருணயக் குழுவின் மாவட்டத் தலைவரான அரசாங்க அதிபருக்கு முகவரியிட்டு, தேசிய எல்லை நிருணய ஆணைக்குழுவின் தவிசாளருக்கு பிரதியிட்டு எதிர்வரும் 2023.04.25 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைப்பதன் மூலம், உரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கான அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும்- என்றார்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...