12 22
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் திண்டாடும் மக்கள்

Share

இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் திண்டாடும் மக்கள்

இலங்கையில் (Srilanka) பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், அரிசி தட்டுப்பாடு தொடர்வதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

இவ்வாறான நிலையில், அரிசியின் விலை அதிகரித்துள்ளதாகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகள் உண்மையென அரச தரப்பு ஒத்துக் கொண்டுள்ளது.

குறித்த விடயத்தை கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Vidyaratna) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் இது குறித்து எதிர்க்கட்சியினரையே குற்றம் சாட்டுவது நியாயமில்லை.

இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் திண்டாடும் மக்கள் | Sri Lankas Rice Shortage And Rice Price Hike

அதேவேளை, இந்த அரசு அல்ல, வேறு அரசு ஆட்சியில் இருந்தாலும் இந்தப் பிரச்னை ஏற்படும்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தற்போதைய அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் அரிசி தட்டுப்பாட்டை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மலையகத்தில் மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையினால், தாம் அரிசி விற்பனையை தவிர்த்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...