tamilni 369 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் : தோழி தகவல்

Share

வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் : தோழி தகவல்

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த தனது தோழி சிங்கபூருக்கு சுற்றுலா சென்ற வேளையில் கணவனால் படுகொலை செய்யப்பட்டதாக அவரது தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கை பெண் பலருக்கு தோழியாகவும், எப்போதும் அன்பான வார்த்தைகளையும் புன்னகையையும் கொண்டவர் என தோழியால் அன்புடன் நினைவுகூரப்பட்டார்.

எலிசபெத் கேம்பர் என்பவர் தனது வகுப்புத் தோழியான செவ்வந்தி மதுகா என்ற கொல்லப்பட்ட இலங்கை பெண்ணின் மரணம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை எழுதியுள்ளார்.

அவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பில் வகுப்பு தோழிகளாகும்.

கடந்த 9 ஆம் திகதி Holiday Inn Express Singapore Katong இல் இலங்கை பெண் அவரது கணவர் ஈஷான் என்பவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செவ்வந்தி சிங்கப்பூரில் விடுமுறையில் இருந்தபோது, இந்த சோகம் நடந்ததாக மெல்பேர்னில் அமைந்துள்ள அவரது பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து இருந்த பின்னர் தனது கணவருடன் விடுமுறையில் செல்வதில் செவ்வந்தி மிகவும் உற்சாகமாக இருந்ததாக தோழி குறிப்பிட்டார்.

32 வயதான இவர், அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று வந்த நிலையில், அவரது கணவர் இலங்கையில் பணிபுரிந்து வந்ததாக கேம்பர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...