1 19 scaled
உலகம்செய்திகள்

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை! கருவை கலைத்த தாய்

Share

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை! கருவை கலைத்த தாய்

தமிழக மாவட்டம் அரியலூரில் லொறி ஓட்டுநர் தனது மகளை கர்ப்பமாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (37). லொறி ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர்.

முதல் மனைவிக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மகளின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார், இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது அதிர்ச்சிகர விடயம் தெரிய வந்துள்ளது.

சங்கர் தான் மகள் என்றும் பாராமல் மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிய வரவே, இந்த விடயம் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என எண்ணிய பெண்ணின் தாய் கருவை கலைக்க முடிவெடுத்துள்ளார்.

அதன்படி மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி மகளுக்கு கொடுத்துள்ளார். அதை சாப்பிட மாணவி மயங்கி விழுந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் அவருக்கு ஆண் சிசு இறந்து பிறந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அதனை ஒரு சாக்குப் பையில் சுற்றி வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவிக்கு தொடர் உதிரப்போக்கு ஏற்பட்டதால், அவரது தாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கருக்கலைப்பு நடந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் போய்சேர அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். பின்னர் பொலிஸார் உடனடியாக சங்கர், அவரது மனைவி மற்றும் கருக்கலைப்பு மாத்திரை விற்ற மருந்தாக உரிமையாளர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

மேலும் புதைக்கப்பட்ட 7 மாத சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர் சிகிச்சை நடந்து வருகிறது.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...