Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

Share

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது நேற்று (மே 02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிவிப்பின்படி, பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் புதிய விலைகள்.

ஒக்டேன் 92 பெட்ரோல்: ஒரு லீற்றர் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 410.00 ஆகும்.

ஒக்டேன் 95 பெட்ரோல்: ஒரு லீற்றர் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 470.00 ஆகும்.

ஒட்டோ டீசல்: ஒரு லீற்றர் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 392.00 ஆகும்.

சுப்பர் டீசல்: ஒரு லீற்றர் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 458.00 ஆகும்.
மண்ணெண்ணெய்: ஒரு லீற்றர் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 265.00 ஆகும்.

திடீரென அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை அதிகரிப்பானது பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக, டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்வு காரணமாக மீன்பிடித் தொழில் மற்றும் விவசாயத் துறையினர் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, நேற்று மாலை முதல் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளைக் காண முடிந்தது. நள்ளிரவுக்கு முன்னதாகப் பழைய விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள் முண்டியடித்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதேவேளை, லங்கா ஐஓசி (LIOC) மற்றும் சினோபெக் (Sinopec) நிறுவனங்களும் தமது விலைகளை இதற்கு இணையாக மாற்றியமைத்துள்ளன.

Share
தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...