10
இலங்கைசெய்திகள்

பயங்கரவாத குற்றச்சாட்டில் கிளிநொச்சி நபர் கைது: கட்டுநாயக்கவில் சுற்றிவளைத்த காவல்துறை!

Share

பயங்கரவாத குற்றச்சாட்டில் கிளிநொச்சி நபர் கைது: கட்டுநாயக்கவில் சுற்றிவளைத்த காவல்துறை!

பிரித்தானியாவில் (UK) இருந்து பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டு பயணத்தடை பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

43 வயதுடைய குறித்த சந்தேகநபர் பிரித்தானியாவில் இருந்து நேற்று (01) இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு இலங்கையை விட்டு பிரித்தானிய குடியுரிமையை பெற்றுச் சென்ற சந்தேகநபர், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளிப்பதற்காக பணம் சேகரித்து கொழும்பு மற்றும் வன்னிப் பிரதேசங்களில் அவ்வாறான நிதிகளை விநியோகித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் நேற்று இலங்கை திரும்பியதும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கிளிநொச்சியை பூர்வீகமாகக் கொண்ட 43 வயதுடையவர் என்பதும், தற்போது அவர் பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்படி, விமான நிலைய காவல்துறையினர் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...