8 14
இலங்கைசெய்திகள்

உலகில் 21 வது இடத்தில் இலங்கை – எதற்கு தெரியுமா…!

Share

உலகில் 21 வது இடத்தில் இலங்கை – எதற்கு தெரியுமா…!

இலங்கை (srilanka) தவறான முடிவெடுத்து உயிரிழப்பவர்களில் பட்டியலில் உலகில் 21 ஆவது இடத்தில் உள்ளதாக இலங்கை மனநல மருத்துவ சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இலங்கை மனநல மருத்துவ சங்கத்தின் தலைவரும் மருத்துவருமான சஜீவன அமரசிங்க (sajeewana amarasinghe) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தவறான முடிவெடுத்து உயிரிழப்பவர்கள் வீதம் அதிகமாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 8 தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகுவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

மனச்சோர்வு மற்றும் பல்வேறு மனநிலை காரணமாக குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவர்களிடம் பரிந்துரை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தற்கொலை தொடர்பான செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளியிடும் போது உரிய நிறுவனங்கள் உட்பட ஊடகவியலாளர்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

தற்கொலை செய்திகளை வெளியிடும் போது அனைத்து தகவல்களையும் உள்ளடங்கியதாக மற்றுமொருவரை தற்கொலைக்கு தூண்டும் வகையில் அவற்றை அறிக்கையிடுவதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...