மின்வெட்டு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கைசெய்திகள்

மின்வெட்டு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

Share

மின்வெட்டு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஐந்து மாவட்டங்களில் நான்கு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சமனலாவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்காக நீர் திறந்து விடப்பட்டால், அன்றைய தினம் முதல் இவ்வாறு மின் தடை ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.

4, 5 நாட்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் விட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு இன்றி திறந்து விடக்கூடிய அதிகபட்ச நீரை தொடர்ந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எப்படியிருப்பினும், இரண்டு மணித்தியாலங்கள் மின்சாரம் தடை செய்தேனும் விவசாயத்திற்கு தேவையான நீரை விடுவிப்பது தற்போது அத்தியாவசியமான விடயம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...