rtjy 52 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் தலைமையில் ஆட்சி மாற்றம்

Share

ரணில் தலைமையில் ஆட்சி மாற்றம்

ராஜபக்சர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்பட்ட பின்னணியில் தான் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீது மக்கள் வைத்த நம்பிக்கை பலவீனமடைய கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம்.

ராஜபக்சர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்பட்ட பின்னணியில் தான் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம்.

வரி சலுகை வழங்கியது தவறு என்ற குற்றச்சாட்டு எமது அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தற்போது வரி விதிப்பு எதிராக ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். போராட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது செயற்படுத்துகிறார்கள்.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம். எமது கொள்கைகளை ஏற்பதா ?அல்லது தற்போதைய நிலையை முன்னெடுத்துச் செல்வதா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.

திறந்த மற்றும் மூடிய பொருளாதார கொள்கைகளை முழுமையாக அமுல்படுத்தாமல் நடுநிலையான பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்த வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டதை நாட்டு மக்களும், எதிர்க்கட்சியினரும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...