கச்சதீவு விவகாரம்: மோடி குற்றச்சாட்டு
இந்தியாஇலங்கைசெய்திகள்

கச்சதீவு விவகாரம்: மோடி குற்றச்சாட்டு

Share

கச்சதீவு விவகாரம்: மோடி குற்றச்சாட்டு

”இந்தியப் பிரிவினைக்கு காங்கிரஸ் தான் காரணம்” என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1974ஆம் ஆண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசாங்கமே வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”காங்கிரஸ் கட்சி அரசியலுக்காக இந்தியாவை மூன்றாகப் பிரித்தார்கள்” என்று மக்களவையில் மோடி தலைமையிலான அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இந்தக் குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், கச்சதீவை இந்தியாவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் தொடர்ந்து கடிதம் எழுதி வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையே அமைந்துள்ள இந்த தீவு, பாரம்பரியமாக இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1974ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி “இந்தோ – இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின்” கீழ் கச்சதீவை இலங்கையின் பிரதேசமாக ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....