Untitled 1
இலங்கைசெய்திகள்

சீசெல்ஸ் – இலங்கை நேரடி விமான சேவை

Share

சீசெல்ஸ் – இலங்கை நேரடி விமான சேவை

சீசெல்சுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை நீண்டகால முயற்சிகளின் பின்னர் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் வகையில் இன்று (21.06.2023) காலை சீசெல்ஸ் நாட்டின் விக்டோரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமொன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்திற்கு ஏர்பஸ் ஏ.320 விமானம் பயன்படுத்தப்பட்டது. எயார் சீசெல்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இந்த SEY-262 விமானம் சீசெல்ஸ் நாட்டில் இருந்து இன்று அதிகாலை 04.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த விமானத்தில் 110 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் அவர்களை வரவேற்கும் வகையில் விசேட வைபவம் ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...