20 1
இலங்கைசெய்திகள்

மே மாதம் பணவீக்கம் வீழ்ச்சி

Share

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் 33.6 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது கடந்த மேமாதத்தில் 22.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இப்பணவீக்க வீழ்ச்சிக்குக் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மேமாதத்தில் உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் விலைகள், கட்டணங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியே பிரதான காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு மேமாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு மேமாதம் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கு மேற்குறிப்பிட்ட பொருட்களின் விலைகள், கட்டணங்கள் உயர்வடைந்தமையே காரணமாகும்.

குறிப்பாக மேமாத காலப்பகுதியில் புதிய மீன், மரக்கறி, சீனி, கோழி இறைச்சி, மைசூர் பருப்பு, உருளைக்கிழங்கு, இஞ்சி, வெள்ளைப்பூடு, பெரிய வெங்காயம், தேசிக்காய், கருவாடு போன்ற உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும், புதிய பழங்கள், பால்மா, அரிசி, தேங்காய், மிளகாய்தூள், தேங்காய் எண்ணெய், பாண், முட்டை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், சிவப்பு வெங்காயம் ஆகிய உணவுப்பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தன என்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணின் பிரகாரம், பொருளாதாரத்தில் தளம்பல் அடையும் விலைகளைக்கொண்ட உணவு, சக்திவலு மற்றும் போக்குவரத்து போன்றவை தவிர்ந்த ஏனையவற்றுக்கான மையப்பணவீக்கமானது கடந்த ஏப்ரல் மாதம் 31.8 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது மேமாதத்தில் 21.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...