21 1
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாடுகளின் வர்த்தக இராஜதந்திரிகளுடன் உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்

Share

இலங்கையின் பொருளாதார மீட்சி செயன்முறையைத் துரிதப்படுத்துவது குறித்து சர்வதேச நாடுகளின் வர்த்தக உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.

சர்வதேச நாடுகளால் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் வர்த்தக உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த செவ்வாய்கிழமை புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் பெலாரஸ், சைப்ரஸ், எதியோப்பியா, ஜோர்தான், கென்யா, அயர்லாந்து, பேரு மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வர்த்தக உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகள் பங்கேற்றிருந்தனர்.

இலங்கைக்கும் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதாரத்தொடர்புகளை மேலும் விரிவுபடுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் குறி;தது ஆராய்வதே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாகக் காணப்பட்டது.

அதன்படி இச்சந்திப்பில் கலந்துகொண்ட இராஜதந்திரிகளுக்கு இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடு, இந்திய ரூபா மூலமான வர்த்தக நடவடிக்கைகள், இந்தியாவுடனான பொருளாதார செயற்திட்டங்கள் என்பன தொடர்பில் விளக்கமளித்த உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் மற்றும் நிதியியல் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்பன பற்றியும் விளக்கமளித்தார்.

அதேவேளை இச்சந்திப்பின்போது வர்த்தகத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மேலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கு நாடுகளுக்கு இடையில் வலுவான பொருளாதாரத்தொடர்புகள் கட்டியெழுப்பப்படவேண்டியது அவசியம் என்று இராஜாதந்திரிகளிடம் சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளமுடியும் என்று குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...