rtjyv scaled
இலங்கைசெய்திகள்

பாண் வாங்கிய பெண்ணுக்கு அதிர்ச்சி

Share

பாண் வாங்கிய பெண்ணுக்கு அதிர்ச்சி

மாத்தறை பம்புரனை பிரதேசத்தில் கடை ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இரண்டு பாண்களை குறித்த பெண் கொள்வனவு செய்துள்ளார்.

நேற்று காலை பாடசாலைகளுக்கு செல்லும் தனது பிள்ளைகளுக்காக பாண் துண்டு ஒன்றை வெட்டு போதே அந்த பீடித்துண்டை அவதானித்துள்ளார்.

முதலில் கறிவேப்பிலை என நினைத்து நசுக்கிய போது பீடி என தெரியவந்தது. பின்னர் நன்றாக வெளியே எடுத்து பார்க்கும் போது பீடியின் பெரிய துண்டு ஒன்று கிடந்துள்ளது.

இதனால் கடும் அதிருப்தியடைந்த பெண் இனிமேல் பாண் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க வேண்டுகிறேன். குறிப்பாக உணவு உற்பத்தியில் பேக்கரி உரிமையாளர்கள் பொறுப்பாக செயற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...