tamilni 258 scaled
இலங்கைசெய்திகள்

பேக்கரி பொருட்களின் விலை பத்து ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்

Share

பேக்கரி பொருட்களின் விலை பத்து ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்

இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் முட்டை, சீனி மற்றும் வெங்காயத்தின் விலையை குறைக்க அரசாங்கம் தலையிடாவிட்டால், பாண் தவிர்ந்த பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பாண் தவிர்ந்த பேக்கரி பொருட்களின் விலை பத்து ரூபாவினாலும், கேக் கிலோ ஒன்றின் விலை நூறு ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முட்டையின் விலை 60 ரூபாவாகவும், ஒரு கிலோ சீனி 305 ரூபாவாகவும், ஒரு கிலோ உப்பு 400 ரூபாவிலிருந்து 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமையே இந்த விலை உயர்விற்கு காரணம்.

குறிப்பாக சந்தையில் முட்டை மற்றும் சீனியின் விலை அதிகரிப்பினால் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் குறைந்த விலையில் கேக் கிடைக்கும் வாய்ப்பை மக்கள் இழக்க நேரிடும்.

கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலம் முடியும் வரை இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முட்டை மற்றும் சீனி முக்கியமாக பேக்கரி பொருட்களுக்கு தேவைப்படுவதுடன், மீன் ரொட்டி, முட்டை ரொட்டி, கட்லட், பஜ்ஜி போன்ற சிற்றுண்டிகளின் உற்பத்திக்கு வெங்காயம் இன்றியமையாதது. இந்த பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் பேக்கரி உரிமையாளர்களால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...